ADDED : ஜூன் 08, 2026 09:54 PM
கோவை: விவசாயக் கருவிகள் பட்டியலில் வேளாண் டிராக்டர்களையும் இணைக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு டிராக்டரை நிறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘டிராக்டர்களுக்கான ஜி.எஸ்.டி., வாட் வரி மற்றும் சாலை வரிகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாய பணிகளுக்கான டிராக்டர்களுக்கு டீசல் போடும் போது வாட் வரி விதிக்கக்கூடாது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் டிராக்டர்களை ஓட்டக் கூடாது என சட்டம் உள்ளது. அப்படி எனில், டிராக்டர்களுக்கு சாலை வரி வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?
வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். உலகில் உள்ள ஏழு நாடுகளில் வேளாண் டிராக்டர்களுக்கு வரியே கிடையாது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இத்தனை வரிகள் வசூலிக்கப்படுகின்றன’ என்றனர்.
