/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 07, 2024 05:50 AM

சூலுார்; ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சூலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், ரேஷன் கடையில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க கோரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கடந்த, 49 நாட்களாக ரேஷன் கடைகள் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
50 வது நாளான நேற்று, சூலுார் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் சண்முகம் தலைமையில், பேரணியாக சென்று, தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நிர்வாகிகள் பேசுகையில், ''கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த முறை தேங்காய் உடைக்கும் போராட்டத்தை பல நாட்கள் நடத்தினோம். கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு கூறியது. அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், 100 நாள், 100 கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்,'' என்றனர்.
எம்.எல்.ஏ., கந்தசாமி விவசாயிகள் மத்தியில் பேசுகையில், ''இரண்டு நாட்கள் மட்டுமே சட்டசபை கூட உள்ளது. தொகுதி பிரச்னை குறித்து பேச முடியாத நிலை உள்ளது. சென்னையில் நடக்கும், 100வது நாள் போராட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்று ஆதரவு தெரிவிக்கும்,'' என்றார்.