ADDED : மார் 09, 2025 11:50 PM
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஒரு தம்பதி, தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தங்களது, 27 வயது மகளை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவை, ஆய்வு செய்த போலீசார் மருத்துவமனையில் இருந்து, பெண் டாக்டர் வெளியேறுவதை கண்டறிந்தனர். இதையடுத்து, போலீசார் பெண்ணின் மொபைல்போன் டவரை ஆய்வு செய்தனர்.
அதில் அவர் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, தனியார் விடுதியில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், பெண் டாக்டர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன், விஷம் அருந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அவரை மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.