/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை; கோவையில் டாக்டர்கள் ஆவேசம் பணி புறக்கணிப்பால் நோயாளிகள் அவதி

ADDED : ஆக 18, 2024 01:22 AM

கோவை;மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, 7:30 மணி முதல் 8:30 மணி வரை, பணிப்புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம், பயிற்சி டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு டாக்டர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் கனகராஜன் கூறுகையில், ''கொல்கத்தாவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட கண்டிக்கத்தக்கது. அவர் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
டாக்டர்கள், நர்ஸ்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உடனடியாக மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரிடம் வடமாநில வாலிபர் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். மாணவர்களுக்கு தேசிய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, ஓய்வு அறை ஏற்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
டாக்டர்களின் போராட்டத்தால், அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில், சிகிச்சை அளிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.