/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைக்கோவில் வளாகத்தில் அசுத்தம்! அத்துமீறல் தடுக்க நடவடிக்கை தேவை
/
மலைக்கோவில் வளாகத்தில் அசுத்தம்! அத்துமீறல் தடுக்க நடவடிக்கை தேவை
மலைக்கோவில் வளாகத்தில் அசுத்தம்! அத்துமீறல் தடுக்க நடவடிக்கை தேவை
மலைக்கோவில் வளாகத்தில் அசுத்தம்! அத்துமீறல் தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 24, 2024 09:42 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கனககிரி வேலாயுத சுவாமி மலைக்கோவில் வளாகத்தை, மர்ம நபர்கள் அசுத்தம் செய்வதால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கனககிரி வேலாயுத சுவாமி கோவில் மிகவும் பழமையானது. கோவிலில் பக்தர்கள் அதிகளவு வழிபாடு செய்கின்றனர். இந்த மலைக்கோவிலுக்கு வர இரண்டு வழிகள் உள்ளது. முன்பக்கமாக படி ஏறி செல்ல வேண்டும். பின்பக்கம் வாகனங்களில் செல்ல ரோடு உள்ளது.
கோவிலின் பின்பக்க ரோட்டின் வழியாக, தினமும் அதிகப்படியானவர்கள் சென்று மலையில் உள்ள பாறைகளின் இடுக்குகளில் அதிகளவு குப்பை கொட்டி செல்கின்றனர். சிலர் இப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
பாறைகளின் இடுக்குகளை, 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர். மேலும், அப்பகுதியில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகளான சிரிஞ் ஊசிகள் மற்றும் ட்ரிப் பாட்டில்கள் கிடக்கிறது.
இப்பகுதியில் இருப்பது மருத்துவக்கழிவுகளா அல்லது போதை மருந்துக்கு பயன்படுத்திய ஊசிகளா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த வழியில் மாலை நேரத்தில், கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் அச்சப்பட்டு, முன் பக்கமுள்ள படிக்கட்டு வழியாக நடந்து செல்கின்றனர்.
இதை கோவில் நிர்வாகமோ அல்லது போலீசாரோ கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் கீழ் பகுதியில் இரவு நேரத்தில் யாரும் உள்ளே நுழையாத வகையில் கம்பி வேலி அல்லது சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பின் பக்க வழித்தடத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

