/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை முதல்ல சரி பண்ணுங்க அப்புறம் நல்லதா ரெண்டு பஸ் விடுங்க பெரியபுத்துார் பொதுமக்கள் கோரிக்கை

ADDED : மார் 05, 2025 03:31 AM

கோவை,:காந்திபுரத்திலிருந்து அன்னுார் ஒன்றியம் வடவள்ளி கிராமம் அருகே உள்ள, பெரியபுத்துாருக்கு செல்லும் சாலையை சீரமைத்து, பஸ் இயக்க வேண்டும் என்று, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரியபுத்துாரிலிருந்து காந்திபுரம் வரை செல்லும் சாலையில், செங்காளிபாளையம் வரை சாலை மிகவும் பழுதுபட்டுள்ளது.
குடிநீர் குழாய் பதித்தல், வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீர் குழாய் பதித்தல், அத்திக்கடவு குடிநீர் திட்டத்துக்காக குழாய் தோண்டி பதித்தல் உள்ளிட்ட பணிகளால், ரோடு பலமுறை சேதமடைந்தது. மீண்டும் சீரமைக்கப்படவில்லை.
இச்சூழலில், தொலைதொடர்புதுறையும் பணி மேற்கொண்டதால், சாலை முழுமையாக மேடு பள்ளமாக மாறிவிட்டது. இதனால், காந்திபுரத்திலிருந்து முகாசிசிம்சம்பட்டி வரை, ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த, 82 பி பஸ் நிறுத்தப்பட்டது.
அன்றாடம் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், விவசாயிகள், மகளிர் என்று அனைத்து தரப்பினரும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையை சரிசெய்து பஸ் இயக்க வேண்டுமென, பெரியபுத்துார் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.