/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் இன்று கொடியேற்றம்
/
அரங்கநாதர் கோவிலில் இன்று கொடியேற்றம்
ADDED : மார் 05, 2025 10:34 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று மாசி மகத் தேர்த்திருவிழா, கொடியேற்றம் நடக்க உள்ளது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத்தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரவு கிராம சாந்தி பூஜை நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடக்க உள்ளது.
இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 7ம் தேதி இரவு சிம்ம வாகனம், 8ம் தேதி அனுமந்த வாகனம், 9ம் தேதி கருட வாகனங்களில் அரங்கநாத பெருமாள் சுவாமி திருவீதி உலா நடக்க உள்ளது.
வரும் 10ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்க உள்ளது. 12ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், தேரோட்டமும் நடக்கிறது.
வரும் 13ம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், 15ம் தேதி சந்தான சேவை, சாற்றுமுறை பூர்த்தியும் நடக்க உள்ளன.