ADDED : மே 01, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை மழை பெய்யும், மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.
ஆனால், இந்தாண்டு இதுவரை மழை பொழிவு இல்லை. வெயில் அதிகமாக உள்ளதால், வறட்சி தலைதுாக்கியுள்ளது.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமுள்ளதால், குழந்தைகளை திறந்தவெளியில் வெயிலில் விளையாட அனுப்ப வேண்டாம். வீட்டிலேயே மரநிழலில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
அடிக்கடி, இளநீர், பழரசம், நீர் மோர் உள்ளிட்ட நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். அவர்களது உடல் வெப்பம், ஆரோக்கியத்தை பெற்றோர் கண்காணிக்க வேண்டும், என, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

