ADDED : ஆக 12, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
கோவை: கொடிசியா அமைப்பு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கோவை மண்டலம் இணைந்து இ.பி.எப். திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
கொடிசியா தலைவர் ரங்கசாமி பேசுகையில், ‘‘ஜி.எஸ்.டி. அமல்படுத்திய போது மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதலால் நடைமுறைகளை ஏற்க சுலபமாக இருந்தது. புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தும் போது எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை கொடுக்க வேண்டும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில் இ.பி.எப்.ஓ அதிகாரிகள், ‘இ.பி.எப் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கொடுக்க தயாராகவுள்ளோம். உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கொடிசியா வளாகத்தில் உதவி மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.
பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தோர் பங்கேற்றனர்.
