/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது
/
பார் கண்காணிப்பாளருக்கு அடி நான்கு பேர் கைது
ADDED : ஆக 28, 2024 01:13 AM
கோவை:தொண்டாமுத்துார் பகுதியில் பார் கண்காணிப்பாளரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி ராமலிங்கம் காலனி இரண்டாவது வீதியை சேர்ந்தவர் சதீஷ், 23. தொண்டாமுத்துார் - சிறுவாணி சாலையில் உள்ள மதுபான பாரில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 25ம் தேதி வீரகேரளம் பகுதியை சேர்ந்த உதயமணி, 25, அண்ணாதுரை, 31, ஆசைத்தம்பி, சிவகங்கையை சேர்ந்த ஆண்டிசெல்வன், 19 ஆகியோர் பாருக்கு மது அருந்த சென்றுள்ளனர்.
மது குடித்த பிறகு பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பார் கண்காணிப்பாளர் சதீஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நான்கு பேரும் சேர்ந்து பார் கண்காணிப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டி, பாட்டில் மற்றும் கட்டையாால் தாக்கினர்.
சதீஷ் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

