/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி 'ஸ்டாக் மார்க்கெட்' செயலி மூலம் பல லட்சம் மோசடி: ராஜஸ்தானை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை
/
போலி 'ஸ்டாக் மார்க்கெட்' செயலி மூலம் பல லட்சம் மோசடி: ராஜஸ்தானை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை
போலி 'ஸ்டாக் மார்க்கெட்' செயலி மூலம் பல லட்சம் மோசடி: ராஜஸ்தானை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை
போலி 'ஸ்டாக் மார்க்கெட்' செயலி மூலம் பல லட்சம் மோசடி: ராஜஸ்தானை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை
ADDED : ஆக 27, 2024 10:33 PM

கோவை;போலி 'ஸ்டாக் மார்க்கெட்' செயலி மூலம் பல லட்சம் மோசடி செய்த நான்கு பேரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி, 28 தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த, டிச., மாதம் 'வாட்ஸ் ஆப்' மூலம் தொடர்பு கொண்ட நபர், தங்களின் பங்கு சந்தை செயலி வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என கூறி, 'பெயின்' செயலியை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார்.
இதை நம்பி ராமசாமி செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் 'டெலிகிராம்' குழுவிலும் சேர்ந்துள்ளார். குழுவில், தினசரி எந்த கம்பெனியின் பங்கை வாங்க வேண்டும், அதை எப்போது விற்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. மேலும், முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்த லாபம் குறித்தும் பகிர்ந்தும் ஆசையை துாண்டியுள்ளனர். இவற்றை நம்பிய, ராமசாமியும் முதலீடு செய்ய துவக்கினார்.
உண்மையான 'ஸ்டாக் மார்க்கெட்' செயலிகளை போலவே வடிவமைக்கப்பட்ட இந்த செயலி மூலம், ராமசாமியிடம் பங்குகளை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தியுள்ளனர். ராமசாமியும் சுமார், 9 லட்சத்து 28 ஆயிரம் வரை இதில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு லாபம் மற்றும் முதலீடு திருப்பி கிடைக்காததால், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த சத்யநாராயணன், 30, கிசான் சவுதரி, 20, சுனில் சரண், 23, சந்தீப் குமார் 26 என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, ராஜஸ்தான் சென்ற கோவை சைபர் கிரைம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, விசாரணைக்காக கோவை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், வங்கி கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், நான்கு லட்சம் ரூபாயை போலீசார் முடக்கியுள்ளனர்.

