தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நிபுணர்கள் இலவச ஆலோசனை

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நிபுணர்கள் இலவச ஆலோசனை

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நிபுணர்கள் இலவச ஆலோசனை


ADDED : செப் 04, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அதிநவீன ரோபோட்டிக் சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், கே.எம்.சி.எச்.மருத்துவமனை வரும் 30 வரை, இலவச ஆலோசனை முகாமை, நடத்துகிறது. 

கே.எம்.சி.எச். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை துறையில் முன்னணி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வருகிறது.

இந்த சிகிச்சை முறை குறித்து பொதுமக்கள் அறிய, வரும் 30 வரை இலவச ஆலோசனை முகாம், அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.

ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில், பாதிப்பு உள்ள இடத்தை தெளிவாக பெரிதாக்கி காட்டுவதால், மருத்துவர் துல்லியமாகவும், சுலபமாகவும் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. சிறிய அளவில் மட்டுமே தோலில் துளையிடப்படுவதால், தழும்புகள் பெரிதாக தெரியாது. பெரிய காயங்கள் இல்லாததால் வலியும், ரத்தபோக்கும் குறைவாக இருக்கும். உடலின் பிற திசுக்கள் பாதிக்கப்படாததால், நோயாளி விரைவில் குணமடைவார்.

தகுதியான நோயாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 74188 87411 என்ற எண்ணில் அழைக்கலாம்.

என்னென்ன நோய்களுக்கு? சிக்கலான ஹெர்னியா, பித்தப்பை, இரைப்பை (வயிறு), உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் நோய்கள், செரிமான மண்டல (ஜி.ஐ.) புற்றுநோய், தைராய்டு மற்றும் நுரையீரல் நோய்கள், கருப்பை, நீர்க்கட்டி மற்றும் மகளிர் புற்றுநோய்கள், சிறுநீரகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை நோய்கள், சிறுநீரக மண்டல புற்றுநோய்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை பெறலாம். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தேவை எனில் டாக்டர்கள் பரிந்துரைப்பர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us