/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு
/
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் சிலைகள் விற்பனை விறுவிறுப்பு
ADDED : செப் 07, 2024 03:01 AM

பொள்ளாச்சி:விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சியில் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஹிந்து அமைப்புகள் தயராகி வருகின்றன.
தெருக்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்காக ஏற்பாடுகளில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
விற்பனை ஜரூர்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில், களிமண் மற்றும் களிமண்ணுடன் கலந்த நவதானிய கலவையிலான சிலை, வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. அரை அடியில் இருந்து, மூன்று அடி வரையான சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த பட்சம், 200 ரூபாய் முதல், 3,000 ரூபாய் சிலைகள் விற்பனை நடைபெற்றது. பூஜைக்கு தேவையான பூக்கள் விற்பனையும் விறு, விறுப்பாக நடைபெற்றன.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், 'மண் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகிறோம். ஒரு லோடு மண் கொடுக்கவே அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மண்பாண்ட தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்தாண்டை விட, இந்தாண்டு மண் கிடைக்கவே போராடும் சூழல் ஏற்பட்டது.
மண்ணுக்காக அரசுத்துறைகளுக்கு அலைந்தும், மண் கிடைக்கவில்லை. இதனால், இந்தாண்டு கிடைத்த மண்ணை கொண்டு மட்டுமே சிலைகள் தயாரிக்க முடிந்தது. கார்த்திகை தீபம் உள்ளிட்டவை தயாரிக்க தேவையான மண் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வால்பாறை
வால்பாறை தாலுக்கா ஹிந்து முன்னணி சார்பில், 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (7ம்தேதி) வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, எஸ்டேட் பகுதிகளுக்கு பிளாஸ்டிக் கவர் அணிவித்தபடி பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.
ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் ஹிந்து முன்னணி சார்பில், இன்று காலைவிநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மூன்று அடி முதல் பத்து அடி வரை விநாயகர் சிலைகள் இன்று காலை கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வரும், 15ம் தேதி, மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது,'' என்றார்.