/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
/
ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ADDED : செப் 11, 2024 02:52 AM

பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கோவை தெற்கு மாவட்டம், ஹிந்து முன்னணி பொள்ளாச்சி நகர் சார்பில், 31ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஆற்றில் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக பல்லடம் ரோடு சந்திப்புக்கு கொண்டு வரப்பட்டன.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அண்ணாதுரை, விசர்ஜன ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
பல்லடம் ரோடு, தேர்நிலையம், எஸ்.எஸ்., கோவில் வீதி, வெங்கட்ரமணன் ரோடு, பஸ் ஸ்டாண்ட், பாலக்காடு ரோடு நல்லுார், ஜமீன் ஊத்துக்குளி வழியாக அம்பராம்பாளையம் வரை ஊர்வலமாக சென்று, ஆழியாறு ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மொத்தம், 54 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று, சூளேஸ்வரன்பட்டியில் ஹிந்துமுன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 12 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று அம்பராம்பாளையம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
உடுமலை
மடத்துக்குளம் பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த, 7ம் தேதி, ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆன்மிகம், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று, மடத்துக்குளம், கொமரலிங்கம் மற்றும் கணியூரில் நடந்தது. மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 54 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கொமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 22 விநாயகர் சிலைகள், கொமரலிங்கத்தில் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரதீப், துணைத்தலைவர் மணிகண்டன், சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் சிவபிரபாகரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

