/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
45 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
/
45 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
ADDED : ஆக 23, 2024 08:35 PM
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 45 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும், செப்., 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இந்தாண்டு ஹிந்து முன்னணி சார்பில், 45 இடங்களில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரமேஷ் கூறுகையில், ஹிந்து முன்னணி சார்பில், தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை ஆகிய மூன்று ஒன்றியங்களில், 45 இடங்களில், இந்தாண்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. பூலுவபட்டியில், விசர்ஜன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது, என்றார்.