/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
/
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : மார் 12, 2025 11:20 PM
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற நபர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், எட்டு கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா, 42 என்ற கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்நபர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, கலெக்டர் பவன்குமார், கருப்பையா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கருப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள கருப்பையாவிடம் வழங்கப்பட்டது.