/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
/
கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 04, 2025 06:08 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சியில் இருந்து, கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு (டிஎன் 38 3096) என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்சில், கடந்த மாதம் 1ம் தேதி, விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்த கேரளா மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த காஜாஹூசைன்,45, என்பவரை பஸ் நடத்துனர், டிரைவர், பொதுமக்கள் பிடித்து தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார், 17 கிலோ, 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது கேரளா மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அந்த நபர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் உள்ள அவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.