/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் குப்பை குவிப்பு; சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஏப் 02, 2024 01:18 AM

குப்பையை அகற்றுங்க!
பொள்ளாச்சி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன், அதிகளவு குப்பை மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி சார்பில் உடனடியாக குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.
-- -காளீஸ்வரன், பொள்ளாச்சி.
புதர் அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு, பகவதிபாளையம் - நெ.10.முத்துார் செல்லும் வழியில் ரோட்டின் இரு பக்கமும் செடிகள் முளைத்து புதர் போன்று வளர்ந்து, ரோட்டை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் இதை கவனித்து புதர்களை அகற்றம் செய்ய வேண்டும்.
-- -சிவம், கிணத்துக்கடவு.
சிதிலமடைந்த ரோடு
உடுமலை- பொள்ளாச்சி ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு சிதிலமடைந்து பள்ளமாக இருப்பதால், வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது தடுமாறுகின்றன. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.
- கதிர்வேலன், உடுமலை.
'பார்க்கிங்' இல்லை
உடுமலை கல்பனா ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திச்செல்கின்றனர். அங்குள்ள வணிக கடைகளுக்கு வரும் பொதுமக்கள் நடப்பதற்கும் வழியில்லாமல் வாகனங்கள் நிற்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சுப்புராஜ், உடுமலை.
தெருநாய் தொல்லை
உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட் விரிவாக்கப்பகுதியில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால், பொதுமக்கள் நடமாட அச்சம் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் விரட்டுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திகேயன், உடுமலை.
எரியாத மின்விளக்குகள்
உடுமலை அருகே மலையாண்டிபட்டிணத்திலிருந்து கண்ணம்மநாயக்கனுார் செல்லும் ரோட்டில் மின் விளக்குகள் எரிவதில்லை. நாள்தோறும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால், திருட்டு பயத்துக்கு ஆளாகின்றனர்.
- அன்பழகன், கண்ணம்மநாயக்கனுார்.
குளக்கரையில் கழிவு
உடுமலை, ஆலாம்பாளையம் குளக்கரைகளில் மதுபாட்டில் துண்டுகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. சமூக விரோத செயல்களால், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வரதராஜ், ஆலாம்பாளையம்.
அழகுபடுத்த வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ரவுண்டானா அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதன் நடுவே, மண் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு செயற்கை நீருற்றுகள், அழகுச்செடிகள் வைத்து நகராட்சி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கந்தசாமி, உடுமலை.
மீட்டர் பெட்டி சேதம்
பொள்ளாச்சி, வெங்கட்ராமன் வீதி, நடுநிலைப்பள்ளி முன் உள்ள மின் கம்பத்தில் இருக்கும் மீட்டர் பெட்டி சேதம் அடைந்து மோசமாக உள்ளது. மேலும், தொட்டுவிடும் உயரத்தில் மீட்டர் பெட்டி உள்ளதால், அசம்பாவிதம் நடக்கும் முன், மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-- -ரமேஷ், பொள்ளாச்சி.

