தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை பறக்கிறதாம்!

குப்பை பறக்கிறதாம்!

குப்பை பறக்கிறதாம்!


ADDED : ஜூன் 09, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் ஊராட்சியில், 12 வார்டுகளில் இருந்து தினமும், 3 முதல், 4 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனாலும் ரோட்டோரங்களில், குப்பை வீசுவது அதிகரித்து வருகிறது.

சின்னதடாகம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்க, 3 பேட்டரி வண்டிகள் உள்ளன. இன்னும் இரு வண்டிகள் தேவை. இரும்பு அல்லது பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வைத்தால், அவை துருப்பிடித்தோ அல்லது அதில் தீ வைப்பதாலோ விரைவில் அழிந்து விடுகின்றன.

குப்பையை மொத்தமாக கொட்டி எடுத்துச் செல்ல டிராக்டர் வேண்டும். தற்காலிக ஏற்பாடாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பையை கொட்டி வருகிறோம். தடுப்பு அமைப்பது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. பேட்டரி வண்டிகள் கிடைத்தவுடன், அனைத்து வீடுகளிலும் குப்பை சேகரிக்கப்படும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us