/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் குப்பை; துர்நாற்றத்தால் அதிருப்தி
/
ரோட்டோரத்தில் குப்பை; துர்நாற்றத்தால் அதிருப்தி
ADDED : ஏப் 12, 2024 11:54 PM

நெகமம்;நெகமம், செட்டிபுதுார் செல்லும் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.
நெகமம் -- வடசித்துார் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த வழித்தடத்தில் செட்டிபுதுார் பகுதியில், ரோட்டின் ஓரத்தில் நீண்ட துாரத்துக்கு அதிகளவு பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் குடியிருப்புகளும் உள்ளது. வழித்தடத்தை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, இங்கு குப்பை கொட்டுவதை தாடுத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்று இடம் தேர்வு செய்து குப்பை கொட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

