/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பை; கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
/
தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பை; கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பை; கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குவியும் குப்பை; கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
ADDED : ஏப் 24, 2024 09:45 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தேர்முட்டி பகுதியில் இருந்து, ஊஞ்சவேலம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரத்தில், பல இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்து அகற்றப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனை மையப்படுத்தி, வணிகக் கடைகளும் புதிது புதிதாக அமைக்கப்படுகின்றன. இவ்வழித்தடத்தில், நெடுஞ்சாலையொட்டி ஆங்காங்கே குடியிருப்பு வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. மக்கள் பெருக்கம் அதிகரிக்கும் நிலையில், கடைகள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள், மூட்டையாக கட்டி, நெடுஞ்சாலையோரத்தில் குவிக்கப்படுகின்றன.
குறிப்பாக, தேர்முட்டி பகுதியில் இருந்து, ஊஞ்சவேலம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் தேக்கமடைந்து அகற்றப்படாமல் உள்ளது. சுற்றுப்பகுதி குடியிருப்பு மக்கள் பலரும் பாதிக்கினறனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நெடுஞ்சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பை, உணவுக் கழிவு, இறைச்சி கழிவுகள், சலுான் கடையில் சேகரமாகும் கழிவுகளை மூட்டைகளில் கட்டி, இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். சின்னாம்பாளையம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இரை தேடி வரும் நாய்கள், திடீரென சாலைகளின் குறுக்கே கடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சில கடைக்காரர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளின், பொதுநலமற்ற செயலால் பலரும் பாதிக்கின்றனர்.
துறை ரீதியான அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள், நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை கண்டறிந்து தடுக்க வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

