/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட தொழில் மையத்தின் 'தாராள' மானியம்! தொழில்முனைவோருக்கு 'ஜாக்பாட்'
/
மாவட்ட தொழில் மையத்தின் 'தாராள' மானியம்! தொழில்முனைவோருக்கு 'ஜாக்பாட்'
மாவட்ட தொழில் மையத்தின் 'தாராள' மானியம்! தொழில்முனைவோருக்கு 'ஜாக்பாட்'
மாவட்ட தொழில் மையத்தின் 'தாராள' மானியம்! தொழில்முனைவோருக்கு 'ஜாக்பாட்'
ADDED : செப் 17, 2024 05:43 AM
கோவை: மாவட்ட தொழில் மையம் வாயிலாக, தொழில் துவங்க வங்கிக் கடன் பெற்று வருபவர்களுக்கு, கோடிக்கணக்கில் மானியத்தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கும், ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கும் மத்திய, மாநில அரசின் பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் மானியத்தின் அடிப்படையில் மாவட்ட தொழில் மையம் கடன் வழங்கி வருகிறது.
'நீட்ஸ்' திட்டத்தில், 2023-24ம் நிதியாண்டில், 34 பேருக்கு, ரூ.10.76 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டான ஏப்ரலில் துவங்கி இதுவரை, 14 பேருக்கு, ரூ.6.50 கோடி ரூபாய் மானியத்துக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், 2023-24ம் நிதியாண்டில், 77 பேருக்கு, வங்கியில் ரூ. 9.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதில் 55 பேருக்கு ரூ. 6.78 கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, 12 பேருக்கு ரூ. 2.57 கோடி கடனுதவி வழங்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு, ரூ. 88.59 லட்சம் மானியம் பரிசீலனையில் உள்ளது.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தில், கடந்த நிதியாண்டு, 177 பேருக்கு, வங்கியில் ரூ. 2.22 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, 102 பேருக்கு, ரூ.1.40 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை, 18 பேருக்கு வங்கியில் ரூ. 32.01 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டு, 10 பேருக்கு, ரூ.14.23 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், கடந்த நிதியாண்டு, 159 பேருக்கு ரூ.5.18 கோடி மானியம், நடப்பு நிதியாண்டில், 24 பேருக்கு ரூ.1.19 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு, நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில், கடந்தாண்டு 148 பேருக்கு, ரூ.5.24 கோடியும், நடப்பு நிதியாண்டு இதுவரை, 41 பேருக்கு, ரூ.1.45 கோடி மதிப்பில் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.