/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணெய்வித்துக்கு முன்னுரிமை கொடுங்க! தென்னை சாகுபடியாளர்கள் வலியுறுத்தல்
/
எண்ணெய்வித்துக்கு முன்னுரிமை கொடுங்க! தென்னை சாகுபடியாளர்கள் வலியுறுத்தல்
எண்ணெய்வித்துக்கு முன்னுரிமை கொடுங்க! தென்னை சாகுபடியாளர்கள் வலியுறுத்தல்
எண்ணெய்வித்துக்கு முன்னுரிமை கொடுங்க! தென்னை சாகுபடியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2024 01:36 AM
பொள்ளாச்சி:'உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்வித்து பயிர்களை முழுமையாக பயன்படுத்திய பின், வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டும்,' என தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய்க்கு விலை இல்லாதது; நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வருமாறு:
உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்து பயிர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவற்றுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே, வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் பிரதான வேளாண் விளைபொருளான தேங்காய், கடந்த சில ஆண்டுகளாக கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எனவே, தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியம் மிகுந்த தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.
தென்னை நோய் தாக்குதல் மற்றும் உற்பத்தி இழப்பு என பல்வேறு பிரச்னைகளை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், தென்னை நுண்ணுாட்டத்தை, 50 சதவீதம் மானியத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.