/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த ஜி.கே.என்.எம்.,
/
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த ஜி.கே.என்.எம்.,
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த ஜி.கே.என்.எம்.,
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த ஜி.கே.என்.எம்.,
ADDED : ஜூன் 26, 2024 10:53 PM

கோவை: ஜி.கே.என்.எம்., புறநோளிகள் பிரிவு, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சின், 'மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மையம்' என்ற, சாதனையை படைத்துள்ளது.
ஜி.கே.என்.எம்.,-- ஒ.பி., 3.3 லட்சம் சதுர அடியில், 2.39 ஏக்கரில், ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையமாக அமைந்துள்ளது. எட்டு தளங்கள், 30 மருத்துவத் துறைகளுடன், 200 அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டுள்ளது. ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், சர்வதேச பதிவுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுகோல்களின்படி, ஜி.கே.என்.எம்., -- ஒ.பி., ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2025 பதிப்பில், வெற்றிகரமாக இடம்பிடித்துள்ளது.
இதனை உறுதி செய்த, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றாளர் விவேக் ஆர். நாயர், ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமியிடம், சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.