/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடுகள் விற்பனை விறுவிறு; கிடாவுக்கு ரூ.32 ஆயிரம் விலை
/
ஆடுகள் விற்பனை விறுவிறு; கிடாவுக்கு ரூ.32 ஆயிரம் விலை
ஆடுகள் விற்பனை விறுவிறு; கிடாவுக்கு ரூ.32 ஆயிரம் விலை
ஆடுகள் விற்பனை விறுவிறு; கிடாவுக்கு ரூ.32 ஆயிரம் விலை
ADDED : ஜூன் 13, 2024 11:20 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 35 கிலோவுக்கும் அதிகமாக எடை கொண்ட கிடா, 32 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
இஸ்லாமியர்களின், பக்ரீத் பண்டிகை, வரும், 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்து தொழுது, ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.
இதனால், கூட்டு குர்பானி கொடுப்பதற்காக சந்தைகளில் இருந்து ஆடுகளை வாங்கிச் செல்வர். நேற்று, பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில், விற்பனைக்காக, 1,200க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
வியாபாரிகள் கூறியதாவது: பக்ரீத் பண்டிகை நெருங்குவதால், ஆடு விற்பனை அதிகரித்துள்ளது. நேற்று, ஆடுகளை வாங்க உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் வருகை அதிகம் இருந்தது.
அதனால், பெரிய கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது. கடந்த வாரம், அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட கிடா, 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 30 கிலோ எடை கொண்ட செம்மரி மற்றும் வெள்ளாடு கிடா, 26 ஆயிரம் ரூபாய் வரையிலும், 35 கிலோவுக்கு மேல் எடை கொண்ட கிடா 32 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது.
இவ்வாறு, கூறினர்.

