/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறை தீர்ப்பாயே கோகுல கிருஷ்ணா!
/
குறை தீர்ப்பாயே கோகுல கிருஷ்ணா!
ADDED : ஆக 27, 2024 12:17 AM

கோவையில் நேற்று, ஜென்மாஷ்டமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவால் கிருஷ்ணர் பாதங்களை கோலமிட்டனர். மாவிலை தோரணங்கள், வாழைக்கன்றுகளால் அலங்கரித்தனர்.
பால், நெய், வெண்ணெய், தட்டைமுருக்கு, சீடை, பொட்டுக்கடலை மாவு, அவல், அப்பம், சுக்கு கலந்த வெல்லம், பழ வகைகளை படைத்தும், பூக்கள் தூவியும் கிருஷ்ணர் பாடல்களை பாடியும், நடனமாடியும் மனதார வணங்கினர்.
பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும் மகிழ்ந்தனர். பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பதிவு செய்தனர்.
கோவை கொடிசியா அருகே உள்ள ஜெகன்நாதர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு ஆராதனை, அகண்ட நாம பஜனை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. இடையே, பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவு நடந்தது. ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகளும், கோபூஜையும் நடந்தன.
பக்தி விநோத சுவாமி மகராஜின் கிருஷ்ணலீலா சொற்பொழிவு நடந்தது. நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள், கிருஷ்ண ஜெயந்தி விழாவை 'கலர்புல்' ஆக மாற்றியது. இது போல், நகரில் உள்ள பெருமாள் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்திவிழா கோலாகலமாக நடந்தது.
ராதைகளுக்கும் பசிக்கும்ல!
இடம்: கோவை காட்டூர்.

