/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; வழிப்பறி திருடர்கள் அட்டூழியம்
/
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; வழிப்பறி திருடர்கள் அட்டூழியம்
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; வழிப்பறி திருடர்கள் அட்டூழியம்
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; வழிப்பறி திருடர்கள் அட்டூழியம்
ADDED : ஏப் 24, 2024 10:32 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில், பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
கோவை, உக்கடம் வைசியாள் வீதியை சேர்ந்தவர் கவிதா, 35. இவர், தனது கணவர் மணிகண்டன் மற்றும் இரு குழந்தைகளுடன் குடியிருந்து வரும் நிலையில், தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், தனது குழந்தைகளுடன், பொள்ளாச்சி சி.என்.எஸ்., அப்பார்ட்மென்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த, 10 நாட்களாக அவர், தனது இருசக்கர வாகனத்தில், காலை, 4:30 மணிக்கு கோவைக்கு செல்வதும், மாலை, 5:00 மணிக்கு அக்கா வீட்டிற்கு திரும்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வாகனத்தை உக்கடத்தில் உள்ள கடையில் நிறுத்தி விட்டு, பஸ்சில் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். மகாலிங்கபுரம் 'ஆர்ச்' பஸ் ஸ்டாப்பில் இறங்கி சித்தி விநாயகர் கோவில் வீதி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அவர் அளித்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடுகின்றனர். விசாரணையில், ஆறேமுக்கால் பவுன் தங்க சங்கிலி -தாலிக்கொடியும், 2 பவுன் தங்கச் சங்கிலியும் பறிபோனது தெரியவந்தது.

