ADDED : ஜூலை 14, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கிணத்துக்கடவு வட்ட கிளை சார்பில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் வாயிலாக செயல்படுத்துதல், சுகாதாரத் துறையில் ஆண், பெண் பாகு இல்லாமல் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.
தாமரைக்குளம் அரசு மருத்துவமனையில் இரவு காவலர் நியமிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, அரசின் தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
