/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசுப்பள்ளி: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசுப்பள்ளி: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத அரசுப்பள்ளி: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவர் இல்லாத அரசுப்பள்ளி: மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஆக 28, 2024 11:46 PM
வால்பாறை : வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்தப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் தான், அனைத்து அரசுத்தேர்வு மற்றும் அரசு மற்றும் தனியார் அமைப்புக்களின் விழாக்களும் நடக்கிறது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அவ்வப்போது இரவு நேரத்தில் சிறுத்தையும் பள்ளிக்கு 'விசிட்' செய்வதால், மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மாணவியருக்கு கழிப்பிட வசதி இல்லை. கூடுதல் கழிப்பிடம் கட்ட வேண்டும். இரவு நேரக்காவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்,' என்றனர்.