/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு கட்டாத பயனாளிகளிடம் பணம் திரும்ப வசூலிக்க முடிவு தீர்மானம் நிறைவேற்ற அரசு உத்தரவு

ADDED : ஆக 11, 2024 11:25 PM
கோவில்பாளையம்:வருகிற 15ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் சாமகுளம் வட்டாரத்தில் உள்ள கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹார சாம குளம், வெள்ளமடை, கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி, கீரணத்தம் ஆகிய ஏழு ஊராட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு : வருகிற 15ம் தேதி காலை 11:00 மணிக்கு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, பணம் வழங்கப்பட்ட பிறகும், வீடு கட்டி முடிக்காமல் உள்ள பயனாளிகளின் பட்டியலை வாசித்து, அவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க ஒப்புதல் பெறுதல்.
பெண்களை நிர்வாகிகளாக கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு ரெண்டு சதவீதம் வட்டி மானியமாக, அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வழங்குவது குறித்து விவாதித்தல். குறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத நிதி வழங்குதல் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 21 ஊராட்சிகளிலும் வருகிற 15ம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் கோரிக்கைகள், குறைகள் இருப்பின் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்,' என தெரிவித்துள்ளார்.