/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டதாரி ஆசிரியர் மகளிர் தின விழா
/
பட்டதாரி ஆசிரியர் மகளிர் தின விழா
ADDED : மார் 11, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா, ரத்தினம் கலைக் கல்லுாரியில் நடந்தது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலர் அன்பழகன், பெண் ஆசிரியர்களுக்கு, மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார்.
சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் காஜாமுகைதீன், மாவட்ட செயலாளர் சாலமன்ராஜ் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.