/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 24, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கற்பகம் பொறியியல் கல்லுாரியில், 21வது பட்டமளிப்பு விழா, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமையில் நடந்தது.
சென்னை ஐ.ஐ.டி., கட்டட பொறியியல் துறை பேராசிரியர் அருண் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில், ஆயிரத்து 250 மாணவர்களுக்கு பட்டங்களும், பன்னிரெண்டு மாணவர்களுக்கு பட்டங்களுடன், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, அறங்காவலர் தமயந்தி, கல்லுாரியின் முதல்வர் குமார் சின்னையன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.