/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானியம்
/
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானியம்
ADDED : ஜூலை 19, 2024 11:55 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், விவசாயிகள் மானியங்கள் பெற தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், 2024-25 வாயிலாக, மானிய திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில், செடி முருங்கை ஒரு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. வாழை முட்டு கட்டுதல், ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் மானியம், நிரந்தர பந்தல் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற, சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, பேங்க் பாஸ்புக் நகல், மூன்று போட்டோ போன்ற ஆவணங்கள் கொண்டு பதிவு செய்ய வேண்டும். திட்டங்கள் பற்றி கூடுதல் தகவல்கள் பெற துறை அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என, கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.