/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கு தீயால் காற்று மாசு கலெக்டருக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ADDED : ஏப் 30, 2024 11:59 PM
கோவை வெள்ளலுார் குப்பை கிடங்கு தீ விபத்தால் காற்று மாசு ஏற்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கோவை கலெக்டருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை வெள்ளலுாரில் உள்ள குப்பை கிடங்கில் ஏப்ரல் 6ம் தேதி தீ பிடித்தது. மூன்று நாட்களுக்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது. மாநகராட்சியின் மெத்தனமே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. குப்பை கிடங்கு தீயால் ஏற்பட்ட காற்று மாசால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு கோவை கலெக்டர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாநகராட்சி ஆகிய அரசு அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு மே 28ம் தேதி சென்னையில் உள்ன தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.