நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், அரிசி கார்டாக மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொது மக்கள் பயன்பெறலாம்.