/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ் '
/
கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ் '
ADDED : மார் 13, 2025 05:56 AM

கோவை; கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில், கஞ்சா விற்பனை செய்து வந்த சிங்காநல்லுாரை சேர்ந்த கருப்பையா, 42 என்பவரை, கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வருவதால், கருப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில், கோவை கலெக்டர் பவன்குமார், கருப்பையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, 94981 -81212 மற்றும் 'வாட்ஸ் ஆப்' எண் 7708-1 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போலீசார் தெரிவித்தனர்.