sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கிளம்பியாச்சுங்களா? குடும்பத்தோடு வாங்க; பொருட்களை அள்ளிட்டுப் போங்க!

/

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கிளம்பியாச்சுங்களா? குடும்பத்தோடு வாங்க; பொருட்களை அள்ளிட்டுப் போங்க!

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கிளம்பியாச்சுங்களா? குடும்பத்தோடு வாங்க; பொருட்களை அள்ளிட்டுப் போங்க!

'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு கிளம்பியாச்சுங்களா? குடும்பத்தோடு வாங்க; பொருட்களை அள்ளிட்டுப் போங்க!


ADDED : ஆக 17, 2024 01:11 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;உங்கள் வீட்டுக்கும், உங்களுக்கும் என்னென்ன பொருட்கள் வாங்கணும்னு 'லிஸ்ட' எடுத்துட்டீங்களா? குடும்பத்தோடு கிளம்புங்க, கோவையில் உள்ள 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கு.

நீங்கள் இத்தனை நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, 'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி துவங்கியாச்சு.

இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இரு நாட்கள் மட்டுமே கண்காட்சி நடைபெறும்; வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். ஒரே கூரையின் கீழ் நீங்கள் தேடும் அத்தனை பொருட்களையும் வாங்கலாம்.

கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வரும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில், குழந்தைகள், இல்லத்தரசிகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரின் தேடலுக்கும் தீனி போடும் வகையில் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேவையானதை பொறுமையாக தேர்வு செய்து, சலுகை விலை மற்றும் ஆபர்களில் வாங்கலாம்.

கிச்சன் பொருட்கள்


உங்கள் வீட்டு சமையலறையை 'ஸ்மார்ட்'டாக மாற்றியமைக்க ஆசைப்படுகிறீர்களா. அதற்கேற்ற 'மாடுலர் கிச்சன்' மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதனை பார்வையிட்டு, 'மாடுலர் கிச்சன்' அமைக்கலாம். சிம்னி அடுப்புகள், இரண்டு பர்னர், மூன்று பர்னர், நான்கு பர்னர் காஸ் அடுப்புகள், மேஜிக் மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், நான் ஸ்டிக் தவா, பனியாரக் கல், ஆப்பச்சட்டி உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன.

சிம்னி அடுப்பு வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. அவற்றின் செயல்பாடுகளை கேட்டறிகின்றனர். பாத்திரங்கள் கழுவுவதற்கும் மெஷின் வந்திருக்கிறது; தண்ணீரை பீய்ச்சியடித்து எவ்வாறு பாத்திரங்கள் கழுவப்பட்டு சுத்தமாகின்றன என்பதை செயல் விளக்கம் செய்து காட்டுகின்றனர்.

காய்கறிகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஐந்தடுக்கு டிரே வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆயில் ப்ரீ ஸ்னாக்ஸ் மேக்கர் கருவியில் ஸ்னாக்ஸ் வகைகளை பொரித்துக் காட்டுகின்றனர்.

பேக் வகைகள்


பெண்களை ஈர்க்கும் வகையில் லெதர் பேக், ஹேண்ட் பேக், மணி பர்ஸ், பெல்ட், செப்பல்கள், டிராவல் பேக்குகள் உள்ளன. டூர் செல்லும்போது, காரில் எடுத்துச் செல்லும் வகையில் மடக்கு சேர், கட்டில் மற்றும் நாற்காலி உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தவிர சணல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேக்குகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு இருக்கின்றன.தையல் மெஷின் மற்றும் எம்ப்ராய்டரி மெஷின்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு விலைகளில் 'சிசி டிவி' கேமராக்களும் உள்ளன.

கார் மற்றும் பைக் வாஷர் மெஷின், வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்வதற்கும், மசாஜ் செய்வதற்கும் தேவையான கருவிகளை பர்ச்சேஸ் செய்யலாம். பாதத்துக்கு எவ்வாறு மசாஜ் செய்வது என செயல் விளக்கம் செய்து காட்டப்படுகிறது.

ராஜஸ்தான் கலைப்பொருட்கள்


வீட்டை அலங்கரிக்க ராஜஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிராஸ் மெட்டலில் பைக் போல் செய்யப்பட்டுள்ள கடிகாரம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

ராஜஸ்தான் மார்பிள்ஸில் தயாரிக்கப்பட்ட புத்தர் சிலை, யானை சிலை, செஸ் போர்டு, மலை முகடுகளில் தண்ணீர் வழிந்தோடி வரும் கட்டமைப்பு, சிங்கத்தின் வாயில் இருந்து நீரூற்று போல் தண்ணீர் வருவது போன்றவை உங்கள் வீட்டின் வரவேற்பறையை மேலும் அழகூட்டும்.

கேரளா ஸ்டைலில் சமைக்கலாம்


விதவிதமாக சமைக்க விரும்பும் சமையல் ராணிகள், இனி கேரளா ஸ்டைல் உணவுகளையும் ஈசியாக சமைக்கலாம். 'தினமலர் - ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி, 'இறைச்சி உலர்த்தியது', 'கோழி பிரளன்', மீன் மிளகிட்டது, புட்டு மாவு என கேரள வகை உணவு பொடிகள் கிடைக்கின்றன.

'இன்ஸ்டன்ட் டிரிங்க் மிக்ஸ்' வகைகளில் டிரெண்டிங் 'மொயிட்டோ' மிக்ஸ் பொடியை வாங்க கூட்டம் அள்ளுகிறது. வழக்கமாக கிடைக்கும் பாதாம், பிஸ்தா, ரோஸ் மில்க் வகைகளுடன் மேங்கோ, 'மொயிட்டோ' என, 20க்கும் மேற்பட்ட 'இன்ஸ்டன்ட் டிரிங்க் மிக்ஸ்' பொடிகள், 'கிரன்ச்சி சிக்கன் மசாலா பொடி' பயன்படுத்தி சமையலில் அசத்தலாம்.

இட்லி பொடியில் இத்தனை வகையா என ஆச்சரியப்படும் அளவுக்கு, துாதுவளை இட்லி பொடி, பிரண்டை இட்லி பொடி, கறிவேப்பிலை இட்லி பொடி என இட்லி பொடியிலேயே வெரைட்டி காட்டுகின்றனர்.

இது தவிர முருங்கை இலை சூப் முருங்கைக்காய் சூப், ஆவாரம் பூ சூப், மணத்தக்காளி சூப் என பல வகை சூப் பொடிகள் உள்ளன. பிரீயா சாம்பிள் பார்த்து பொடிகளை வாங்கிச் செல்லலாம்.

இன்றும், நாளையும்


இவ்வாறு அரங்குகளில் உள்ள பொருட்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்; பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். வீக் எண்ட் விடுமுறையை குடும்பத்தோடு ஜாலியாக கொண்டாடும் வகையில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு வாங்க.

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லலாம்.

இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி தொடர்ந்து நடைபெறும்; காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை திறந்திருக்கும்; அரங்குகளை பார்வையிட்டு, பொருட்களை தேர்ந்தெடுக்கலாம்.

கார் மற்றும் பைக்குகளை நிறுத்துவதற்கு விசாலமான 'பார்க்கிங்' வசதி இருக்கிறது. வாய்ப்பை தவற விடாமல், குடும்பத்தோடு இன்றே வாருங்கள்; தேவையான பொருட்களை அள்ளிட்டுப் போங்க!

கைகோர்த்த கரங்கள்!


'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, வுட் ஸ்பார்க், நியூ மென்ஸ் மற்றும் ஆல்பா பர்னிச்சர் ஆகிய நிறுவனங்கள் 'கோ--ஸ்பான்சர்'களாக கரம் கோர்க்கின்றன. இந்நிறுவனங்கள் அமைத்துள்ள பிரத்யேக ஸ்டால்களிலும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

என்னங்க... புறப்பட்டு விட்டீர்களா... 'தினமலர்' ஷாப்பிங் திருவிழாவுக்கு!

குதியாட்டம் போடலாம்!

உங்கள் செல்லம், சமத்துக் குட்டியாக இருந்தாலும் சரி, சளைக்காமல் ஆட்டம் போடும் சுட்டியாக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் ஏற்ற விளையாட்டுகள் இருக்கின்றன.மிகப்பெரிய பங்களா வடிவிலான பலுான் சிட்டியில் ஏறிக் குதித்துச் சறுக்கலாம். விடாப்பிடியாக சுற்றிக் குதிக்கும் காளையை அடக்கலாம், தண்ணீரில் மிதக்கும் பலுானுக்குள் பாதுகாப்பாக நாமும் சுழலாம், சுறா வடிவிலான பலுான் வளாகத்தில் மொத், மொத்தென குதித்து ஆடலாம், எலெக்ட்ரிக் டிரெய்ன், எலெக்ட்ரிக் பைக், புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விட டிரம்போலின், வாட்டர் போட், வாட்டர் ரோலர் என விளையாடிச் சலிக்க ஏராளமான விளையாட்டுகள் உள்ளன.போலாமா ஒட்டகசவாரி எனப் பாடிக்கொண்டே, ஒட்டகத்தில் ஒரு 'ரவுண்டு' வரலாம். எரிமலை, பாலைவனம் என மிரட்டலான பேன்டசி அனுபவத்துக்கு இருக்கவே இருக்கிறது 12டி பஸ். ஷாப்பிங் செய்தமாதிரியும் ஆச்சு, குழந்தைகள் என்ஜாய் செய்த மாதிரியும் ஆச்சு!



கேரளா சிப்ஸ், மைசூர் முறுக்கு

ராஜஸ்தான் அப்பளம் இருக்குங்கஒவ்வொரு அரங்காகச் சென்று வருவதற்குள் பசி எடுக்க ஆரம்பிக்கும். பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே, ஷாப்பிங் செய்வதற்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னொரு அரங்கில் கோலி சோடா அருந்தலாம்.90ஸ் கிட்ஸ்களின் பழைய நினைவுகளை துாண்டும் வகையில், சுத்துற மிட்டாய், புளிப்பு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் பேப்பர் அப்பளம் போன்ற 30க்கும் மேற்பட்ட 90ஸ் கிட்ஸ்களின் 'பேவரெட்' மிட்டாய்களுக்கு தனி கடையே உள்ளது.இது மட்டுமின்றி நொறுக்கு தீனி பிரியர்களை திருப்திப்படுத்தும் விதமாக நுாற்றுக்கணக்கான ஸ்நாக்ஸ் வகைகள் இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் என பல மாநிலங்களின் ஸ்நாக்ஸ் வகைகளை ஒரே கூரையின் கீழ் வாங்கும் வகையில் பல அரங்குகள் உள்ளன. 60 வகையான அல்வா, கேரளா சிப்ஸ், மைசூர் முறுக்கு, ராஜஸ்தான் அப்பளம், வத்தல் வகைகள் என எண்ணிக்கை ஏராளம். ஆரோக்கியமான உணவை தேடுபவர்கள் வாய்க்கு ருசியான, சத்தான சிறுதானிய லட்டு, சிறுதானிய ஸ்னாக்ஸ்களுக்கும் பல ஸ்டால்கள் உள்ளன.








      Dinamalar
      Follow us