/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரியில் கடும் மேக மூட்டம் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
நீலகிரியில் கடும் மேக மூட்டம் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
நீலகிரியில் கடும் மேக மூட்டம் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
நீலகிரியில் கடும் மேக மூட்டம் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : மார் 02, 2025 06:23 AM

குன்னூர் : நீலகிரியில் தென்பட்ட கடும் மேக மூட்டத்தால் சுற்றுலா பயணியர் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர், ஊட்டி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஜன., மாதத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது. வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடித்தது; இதில், நீலகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, கடும் மேகமூட்டத்துடன்,இதமான காலநிலை நிலவியது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
வெயிலின் தாக்கத்தால் பல இடங்களிலும் வனத்தீ ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மழையால் வனத்தீ அபாயம் குறைந்தது. மேகமூட்டத்தால், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா மையங்களில் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடுங்குளிர் நிலவி யதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் -- ஊட்டிக்கு வந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளை அணிந்து பயணித்தனர்.