/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்
/
அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 12, 2025 11:18 PM

அன்னுார்; அன்னுார் நகரில், இரண்டாவது நாளாக, நேற்றும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை-யை அடுத்த அன்னுார் வழியாக தினமும் 25,000க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. முகூர்த்த நாட்களில், அதிக வாகனங்கள் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம் துவங்கி, இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அன்னுாரில் கோவை சாலையில் 2 கி.மீ., தொலைவில் உள்ள கே.ஜி. பள்ளி வரை வாகனங்கள் நின்றன.
சத்தி ரோட்டில் 1.5 கி.மீ., தொலைவில் இந்திரா நகர் வரை வாகனங்கள் காத்திருந்தன. அவிநாசி சாலையில் நாகமாபுதூர் வரையும், மேட்டுப்பாளையம் சாலையில் ஜீவா நகர் வரையிலும், வாகனங்கள் நின்றன.
இரண்டாவது நாளாக நேற்றும் மதியம் முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏராளமான மக்கள் பஸ்சில் தொலைவில் இருந்தே இறங்கி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்றனர். 'போலீசார், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.
ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் அன்னுாரை கடப்பதற்கு ஒரு மணி நேரமாகிறது,' என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.