/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆத்துப்பாலம் - உக்கடம் இடையே தொடருது சங்கடம் நெரிசல் தீர்க்க இதோ தீர்வு

ADDED : ஆக 13, 2024 01:01 AM

கோவை;உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, புதியதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின்இறங்குதளத்தில் தொடரும் வாகன நெரிசலால் வாகனஓட்டிகள், பாலத்தை விட்டு இறங்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் சமீபத்தில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. உக்கடம் இறங்கு தளத்தில், அன்றாடம் காலை மற்றும் மாலை நேரங்களில் (பீக் ஹவர்சில்)கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.இதை, நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணித்து சீர்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உக்கடம் பாலத்தின் இறங்கு தளத்தில் வலது பக்கம் (கிழக்காக) சுங்கம் செல்வதற்கான சாலை பிரியும் பகுதி உள்ளது. அங்கு பணிகள் நிறைவடையாததால், அப்பகுதியை கான்கிரீட் தடுப்புகளால் தடுத்துள்ளனர்.
இந்த தடுப்பை, வடக்கு நோக்கி நுாறு மீட்டர் தள்ளி, சாலை இரண்டாக பிரியும் பகுதியில் அமைத்தால், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். அதை செய்யாமல், தெற்கு நோக்கி 100 மீட்டர் தள்ளி அமைத்துள்ளனர்.
இக்குறையை அதிகாரிகளிடம் தெரிவித்து, உடனடியாக சரி செய்ய, பாலத்துக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க., அ.தி.மு.க.,வினரும் முன்வர வேண்டும்.