/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது
/
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : மார் 09, 2025 11:14 PM

வால்பாறை; ஹிந்துக்கள் வழிபாட்டு உரிமையை மீட்க, நேற்று திண்டுக்கல்லில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி முடிவு செய்தது.
ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு செல்லும் வழியில், திருப்பூரில் ஹிந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதனைக்கண்டித்து, வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமையில், காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., நகரத்தலைவர் பாலாஜி, நகர பார்வையாளர் தங்கவேல், பொதுசெயலாளர் சுனில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வினு, இளைஞரணி செயலாளர் முகேஸ் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.