/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முறையற்ற திருமணங்கள் தடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
/
முறையற்ற திருமணங்கள் தடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
முறையற்ற திருமணங்கள் தடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
முறையற்ற திருமணங்கள் தடுக்க ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஆக 23, 2024 12:09 AM
கோவை:கோவையில் சில அரசியல் அமைப்பு அலுவலகங்களில் நடக்கும் முறையற்ற திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஹிந்து முன்னணி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு:
கோவையில் சில அமைப்புகள் சுயமரியாதை திருமணத்தை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் பல திருமணங்களை அவர்களது அலுவலகங்களில் நடத்துகின்றனர்.
பெற்றோருக்கே தெரியாமல் பல இளம் ஜோடிகளை அவர்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்து திருமணம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கல்லுாரிகளில் படிக்கும் மாணவர் மற்றும் மாணவி காதலித்து பெற்றோர்கள் எதிர்க்கும் பட்சத்தில் இவர்களிடம் தஞ்சம் அடைகின்றனர்.
அந்த ஜோடிகளுக்கு திருமணம் நடத்துகின்றனர். இதனால், பல குடும்பங்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறது.
திருமணப்பதிவு அலுவலகம் போல் செயல்படும் இந்த அலுவலகங்களை போலீசாரும் உளவுத்துறையினரும் கண்காணிக்க வேண்டும். முறையற்ற திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.