/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2024 01:25 AM

கோவை;வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், காந்திபார்க் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'வங்கதேசத்தில் நடக்கும் போராட்டத்தில், ஹிந்துக்கள் மத ரீதியாக குறிவைத்து தாக்கப்படுகின்றனர். கோவில்கள் உடைக்கப்படுகின்றன. குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என வலியுறுத்தப்பட்டது.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிஷோர்குமார், சதீஷ், கோட்டச்செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், செயலாளர் ஆறுச்சாமி, செய்தித் தொடர்பாளர் தனபால் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.