/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்வில் 'டைப்' அடிக்கிறது ஒரு கை வெல்லப்போகிறது தன்னம்பிக்கை! ஒரு கையால் தட்டச்சு செய்கிறார் சஞ்சய்
/
தேர்வில் 'டைப்' அடிக்கிறது ஒரு கை வெல்லப்போகிறது தன்னம்பிக்கை! ஒரு கையால் தட்டச்சு செய்கிறார் சஞ்சய்
தேர்வில் 'டைப்' அடிக்கிறது ஒரு கை வெல்லப்போகிறது தன்னம்பிக்கை! ஒரு கையால் தட்டச்சு செய்கிறார் சஞ்சய்
தேர்வில் 'டைப்' அடிக்கிறது ஒரு கை வெல்லப்போகிறது தன்னம்பிக்கை! ஒரு கையால் தட்டச்சு செய்கிறார் சஞ்சய்
ADDED : செப் 01, 2024 01:27 AM

கைகள் செயல் இழந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால், அனைத்தும் கைவசம் என்பதை நிரூபித்துள்ளார் கோவை இளைஞர்.
தமிழகம் முழுவதும் அரசு தட்டச்சு தேர்வு நடந்து வருகிறது. இதில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், இந்த தேர்வை எழுதினர்.
தமிழக அரசு பணிகளில் சேருபவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது.
இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களில் பலர், தட்டச்சு பயிற்சி மேற்கொள்கின்றனர் ஆண்டு தோறும் பிப்., ஆக., மாதங்களில் தட்டச்சு தேர்வு நடக்கும். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தேர்வு நடந்தது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த தட்டச்சு தேர்வில், ஒரு இளைஞர் ஒற்றைக் கையில் தட்டச்சு செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்தபோது, சுற்றியிருந்தவர்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அவர் குறித்து விசாரிக்க களம் இறங்கிய போது தான், அந்த இளைஞரின் வரலாறு கிடைத்தது. அவர் கோவை அன்னூரை சேர்ந்த சஞ்சய், 19.
சஞசய் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில், ஒரு கை செயல் இழந்தது. அதன்பின் துவண்டு விடாமல், கல்லூரியில், பி.காம்., (சி.ஏ.,) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க பயிற்சியும் மேற்கொண்டேன்.
அப்போது அரசு தேர்வுகளுக்கு, தட்டச்சு கூடுதல் தகுதியாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் தட்டச்சு மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கத் துவங்கினேன். ஒரு கையில் தட்டச்சு செய்ய, கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன்.
இன்று (நேற்று) நடந்த அரசு போட்டித் தேர்வில் பங்கேற்றுள்ளேன். இது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாயம் அரசு போட்டித் தேர்வில், உறுதியாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
உங்கள் நம்பிக்கை வெல்லட்டும் சஞ்சய்!