ADDED : ஜூன் 07, 2026 04:41 PM

வால்பாறை: வால்பாறையில் பெய்த கனமழையால், வீட்டின் சுவர் இடிந்து நடைபாதை மீது விழுந்தது.
வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை தீவீரமாக பெய்து வருகிறது. இரவு பகலாக பெய்து வரும் கனமழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இங்குள்ள ஆறு மற்றும் அருவிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையினால், வால்பாறை கக்கன்காலனியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து நடைபாதை மீது விழுந்தது. இதனால் மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 36.53 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 541 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது.
நேற்று பெய்த மழை அளவு (மி.மீ.,): சோலையாறு–52, பரம்பிக்குளம் –14, வால்பாறை– 43, மேல்நீராறு– 61, காடம்பாறை –16, சர்கார்பதி–3, வேட்டைக்காரன்புதார் –9, துணக்கடவு –10, பெருவாரிப்பள்ளம் –12,மேல்ஆழியாறு –2.
