/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
' குடும்பம் 'வெயிட்' பண்ணும் வண்டி ஓட்டும்போது ஞாபகம்'
/
' குடும்பம் 'வெயிட்' பண்ணும் வண்டி ஓட்டும்போது ஞாபகம்'
' குடும்பம் 'வெயிட்' பண்ணும் வண்டி ஓட்டும்போது ஞாபகம்'
' குடும்பம் 'வெயிட்' பண்ணும் வண்டி ஓட்டும்போது ஞாபகம்'
ADDED : ஆக 24, 2024 01:21 AM
போத்தனூர்;கோவை, ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பு மற்றும் போத்தனூர் போக்குவரத்து போலீசார் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிட்கோ மேம்பாலம் அடுத்து ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி அருகே நேற்று நடந்த இந்நிகழ்சிக்கு கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், உடன் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
நம் வரவை எதிர்பார்த்து குடும்பத்தினர் காத்திருப்பர் எனும் எண்ணத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும். அதிவேகமாக செல்வதை விட, சிறிது நேரம் முன்பாகவே கிளம்பினால், பாதுகாப்புடன் நம் பயணம் அமையும். 18 வயதிற்குட்பட்டோர் கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்றார்.
தொடர்ந்து மாணவர்கள், 'போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிப்போம்' என உறுதிமொழி எடுத்தனர். போத்தனூர் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார், ஏட்டுகள் இளங்கோ, ஜான் ஆகியோர், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

