25 ஆண்டுகளுக்கு முன் படித்த அந்த நாள் ஞாபகம் வந்ததே...!
25 ஆண்டுகளுக்கு முன் படித்த அந்த நாள் ஞாபகம் வந்ததே...!
ADDED : ஜூலை 25, 2026 06:22 PM

கோவை: பி.எஸ்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்களின் ‘சங்கமம் –98’ வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. 550 முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிமுகப்படுத்திக் கொண்டு கட்டித்தழுவிக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகேஸ் துளசி கூறுகையில், ‘‘பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி வரலாற்றில், அதிக முன்னாள் மாணவர் சந்திக்கும் நிகழ்ச்சி இதுதான். 22 துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்புக்கு ஒன்றாக வந்துள்ளனர். கால் நுாற்றாண்டுக்கு பிறகு சந்திப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.
பல பேரை அடையாளம் தெரியவில்லை. பேராசிரியர்களிடம் பெயரை சொல்லி அறிமுகம் செய்து கொண்ட பிறகுதான் அவர்களுக்கும் தெரிந்தது. கல்லுாரியில் படித்த போது, ‘வாடா போடா’ என்று பேசிக்கொண்டது போலவே பேசிக்கொள்கிறோம்.
ஆண்டுதோறும் இதே தேதியில் சந்திக்கவுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் கல்லுாரி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்கள் படிப்புக்கு ‘ஸ்காலர்ஷிப்’ கொடுக்க இருக்கிறோம்,’’ என்றார்.
