/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பெய்ய வேண்டி உருவ பொம்மை வழிபாடு
/
மழை பெய்ய வேண்டி உருவ பொம்மை வழிபாடு
ADDED : மே 07, 2024 10:40 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, மழை பெய்ய வேண்டி கிராமத்தில் உருவ பொம்மையை தள்ளு வண்டியில் வைத்து பாட்டு பாடி மக்கள் வழிபட்டனர்.
பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டி, ராசக்காபாளையம், குரும்பபாளையம் பகுதியில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள், உருவ பொம்மையை தள்ளுவண்டியில் அழைத்து சென்றனர். உருவ பொம்மையை வைத்து பறையடித்தும், ஒப்பாரி பாடல்களை பாடியும் கிராம மக்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, ஒவ்வொரு வீடாக சென்று அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் மற்றும் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மூன்று கிராமங்களில் வலம் வந்து உருவ பொம்மையை கிராம எல்லைப்பகுதியில், தீ வைத்து எரித்த பின், பொதுமக்களிடம் சேகரித்த பொருட்களை கொண்டு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

