/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐப்பசி பட்டத்தில் சோளம் விதைத்தால் நல்ல மகசூல் பெறலாம்
/
ஐப்பசி பட்டத்தில் சோளம் விதைத்தால் நல்ல மகசூல் பெறலாம்
ஐப்பசி பட்டத்தில் சோளம் விதைத்தால் நல்ல மகசூல் பெறலாம்
ஐப்பசி பட்டத்தில் சோளம் விதைத்தால் நல்ல மகசூல் பெறலாம்
ADDED : ஜூலை 07, 2024 12:42 AM

கோவை;''விவசாயிகள் புரட்டாசி, ஐப்பசி பட்டத்தில் கே12 சோள ரகத்தை பயிர் செய்தால், நல்ல மகசூல் பெறலாம்,'' என, கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
சூலுார் வட்டம் சோமனுார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, கே-12 சோள விதைப்பண்ணையை, கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:
நமது உணவு முறையில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கிய பங்கு உள்ளன. இதில் சோளம் சார்ந்த பாரம்பரிய உணவுகளான சாதம், களி, ரொட்டி போன்றவையோடு, நுாடுல்ஸ், பிஸ்கட்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சிறுதானியங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இன்றைய தேவைக்கு ஏற்ப, தமிழ்நாடு வேளாண் பல்கலை நல்ல சோள ரக விதைகளை வெளியிட்டு வருகிறது. இந்த விதைகள் வேளாண் துறை மூலமாக மானிய விலையில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, விதை உற்பத்தியாளர்களை அதிகமாக்கிவருகிறது.
சோளத்தில் கே-12 என்ற ரகம், -100 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய குறைந்த வயதுடைய நல்ல ரகம். குளிர்கால மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ரகமாகும். இரட்டிப்பு பயன் தரக்கூடியது. விவசாயிகளின் தீவன தேவை மற்றும் தானியத் தேவையினை, சரிவிகிதத்தில் பூர்த்தி செய்யும்.
இதன் சராசரி மகசூல், மானாவாரியில் ஏக்கருக்கு 1250 கிலோவும், இறவையில், 2320 கிலோ வரையும் கிடைக்கும். தீவனத்தட்டு ஏக்கருக்கு 4 டன் வரை கிடைக்கும்.
எனவே, விவசாயிகள் புரட்டாசி, ஐப்பசி பட்டத்தில் கே12 சோள ரகத்தை பயிர் செய்வதால் நல்ல மகசூல் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், இந்த பட்டத்தில் விதைப்பண்ணை அமைத்தால், விதைச் சான்றளிப்புத்துறை மூலம் தகுந்த ஆலோசனை வழங்கி, தரமான விதையை உற்பத்தி செய்யவும்,அதிக மகசூல் பெறவும் உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, உதவி விதை அலுவலர் பெரியகருப்பன் உடன் இருந்தனர்.