/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள்
ராமகிருஷ்ணா கல்லுாரியில் படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள்
ராமகிருஷ்ணா கல்லுாரியில் படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள்
ADDED : மே 06, 2024 01:20 AM
நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்படுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் மற்றும் செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 1987ம் ஆண்டு, 6 துறைகளுடன் துவங்கப்பட்டது.
தற்போது, 30 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டமேற்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பி.பி.ஏ., லாஜிஸ்டிக்ஸ், பி.எஸ்சி., டிஜிட்டல் அண்டு சைபர் பாரன்சிக் சயின்ஸ் ஆகிய இரு புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
இக்கல்லுாரி, என்.ஐ.ஆர்.எப்.,-ல் தேசிய அளவில் 86-வது இடத்தை பெற்றுள்ளது.சமீபத்தில் எஜூகேசன் வேர்ல்டு இதழ் வெளியிட்ட, தன்னாட்சி கல்லூரிகளின் வரிசையில் தேசிய அளவில் தனியார் 26-வது இடத்தையும், தமிழகத்தில் 9-வது இடத்தையும் பெற்றுள்ளது.
மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு வழிகாட்டி வருகின்றனர்.
சில மாணவர்கள் படிக்கும் போதே ஒன்றுக்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக தனித்தனியே விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக், ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கல்லுாரி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.